follow the truth

follow the truth

December, 18, 2024
HomeTOP1ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நேற்று (17ம் திகதி) இரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவாக கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் அதே விமானத்தில் திரும்பியிருந்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 இல் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...

நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நிதிக்குழுவில் பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார். இதன்படி, அந்தக் குழுவின் தலைவர் பதவியை...

வெள்ளை பூண்டு மோசடிக்கு விரைவில் வழக்கு

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரியளவிலான வெள்ளை பூண்டு மோசடி தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,...