follow the truth

follow the truth

April, 26, 2025
Homeஉலகம்உகண்டாவில் மர்ம காய்ச்சல் - 300 பேர் பாதிப்பு

உகண்டாவில் மர்ம காய்ச்சல் – 300 பேர் பாதிப்பு

Published on

உகண்டா நாட்டின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் இந்நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நோய் பரவிய மாவட்டத்தின் சுகாதாரத்துறை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

இச்சிகிச்சையினால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் குணமடைந்து விடுவதாகவும். புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்நோய் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோயிக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று(26) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில்...

காஷ்மீர் செல்லவேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்...