சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதனை நிதியமைச்சு கவனித்துக் கொள்ளும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு வட்டி குறைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு கயந்த கருணாதிலக்க கூறுகையில், தேசிய மக்கள் சக்தி, வளமான நாடு, அழகிய வாழ்வு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை வட்டி வீதம் சாதாரண வட்டி வீதத்தை விட ஐந்து வீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.