தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளை அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் குழு அலட்சியம் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட 9000 கிலோ அமோக்ஸிசிலின் மூலப்பொருட்களின் தரம் தோல்வியடைந்துள்ளதாகவும் அதற்கு செலுத்திய 104,844,337 ரூபாய் வீண் செலவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தேவைக்கான மொத்த மூலப்பொருட்களின் முழு அளவையும் இறக்குமதி செய்யாமல் 25 கிலோ மட்டும் பெற்று தயாரிக்கப்பட்ட பொருட்களின் தரத்தை சரிபார்த்து தரம் வெற்றியளித்திருந்தால், எஞ்சிய தொகையை இறக்குமதி செய்ய அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப மற்றும் தரக்கட்டுப்பாட்டு குழுக்கள் பரிந்துரை செய்ததாக அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் தொடர்பாக தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல், இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் மொத்த கையிருப்பும் மதிப்பாய்வின் கீழ் உள்ள தணிக்கை திகதி வரை பத்து மாத காலத்திற்கு மருந்தக கூட்டுத்தாபன வளாகத்தில் செயலற்ற நிலையில் இருப்பதால், அதற்கான செலவினம் பொருளாதார மற்றதாகிவிட்டதாகவும், முறையான ஆய்வுகளுக்குப் பிறகு, உயர்தர மூலப்பொருட்களைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கணக்காய்வு காட்டுகிறது.