எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலைக்கு சதொச ஊடாக நெல்லினை கொள்வனவு செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நெல்லை மொத்த அரிசியாக மாற்றுவதற்கு அரசாங்கம் மத்தியஸ்தம் செய்யும் என்றும் இதன் மூலம் அரிசி சந்தையை சீரான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.