எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 முதல் 35 ரூபாய்க்கு இடையில் சில்லறை விலையில் விற்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், முட்டையின் விலையை 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஆண்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு பண்டிகைக் காலங்களில், முட்டையின் விலை, 65-70 ரூபாவாக இருந்த போதிலும், தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை நிலைகள் சீரடைந்துள்ளன