follow the truth

follow the truth

December, 16, 2024
HomeTOP1மீண்டும் SLFP தலைமை பதவிக்கு போட்டியிட மாட்டேன் - மைத்திரி

மீண்டும் SLFP தலைமை பதவிக்கு போட்டியிட மாட்டேன் – மைத்திரி

Published on

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தீர்க்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், மைத்திரிபால சிறிசேன அந்த பதவியில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​பிரதிவாதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு தமது கட்சிக்காரர் போட்டியிட மாட்டார் என்றும் தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலவுக்கு எதிராகவும் போட்டியிடப் போவதில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த உண்மைகளின் அடிப்படையில் இந்த மனுவை தீர்த்து வைக்க முடியும் என ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் திருப்தியடைவதாகவும், அந்த உண்மைகளின் அடிப்படையில் மனுவைத் தீர்ப்பதற்கு இணங்குவதாகவும் மனுதாரரின் சட்டத்தரணி சாந்த ஜயவர்தன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி, மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்ற குழாம், மனுவை வாபஸ் பெற அனுமதித்ததுடன், தள்ளுபடி செய்யவும் முடிவு செய்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் போலி செய்தி

'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இவ்வாறானதொரு...

வரலாற்றில் முதல் தடவையாக விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று...

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு...