உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் வேட்புமனு கோரப்படவுள்ளது.
ஏப்ரல் முதல் பாதியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தேர்தல் ஏழு வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.