கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான 220 ரூபாவுக்கு விற்பனை செய்வது பிரச்சினையாக உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்துச் செலவுகள் காரணமாகக் கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில் அரிசியை உரிய விலைக்கு விற்பனை செய்வது சில்லறை வியாபாரிகளுக்குச் சிரமமாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக இன்று முதல் வழக்குத் தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 307 வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.