இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 101 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
41 இன்னிங்ஸில் 10 சதங்களை ஸ்டீவன் ஸ்மித் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 55 இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 33 சதங்களை அடித்துள்ள ஸ்டீவன் ஸ்மித், அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 12 சதங்கள் அடித்துள்ளார்.