follow the truth

follow the truth

May, 15, 2025
Homeலைஃப்ஸ்டைல்குழந்தைகளுக்கு பிடிக்கும் 'Sweet Milk Balls'

குழந்தைகளுக்கு பிடிக்கும் ‘Sweet Milk Balls’

Published on

குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட்டை ஒருமுறை செய்து கொடுத்தால், அடுத்த முறை எப்போது செய்து கொடுப்பீர்கள் என்று ஆவலுடன் கேட்கும் அளவிற்கு இருக்கும்.

இனிப்பு பால் உருண்டைகள் ‘Sweet Milk Balls’ ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சோள மாவு – 100கிராம்
சீனி – 30கிராம்
பால் – 200மி.லி
வெண்ணிலா எசன்ஸ் – 2மி.லி
உப்பில்லாத பட்டர் – 20கிராம்
உப்பு – தேவையான அளவு
கோகோ பவுடர் – தேவையான அளவு

சோளமாவை சல்லடைக் கொண்டு சலித்து கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் சோளமாவு, சர்க்கரை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதனுடன் பாலை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் மாவு கரைசலை சேர்த்து மிதமான சூட்டில் கெட்டி பதம் வரும் வரை கிளற வேண்டும். இறுதியாக உப்பில்லாத வெண்ணெயை சேர்த்து இறுகும் வரை கிளற வேண்டும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, மிதமான சூட்டில் சிறிய உருண்டை உருட்டி அதன் மீது கோகோ பவுடரை தூவி பரிமாறினால் ஸ்வீட் மில்க் பால்ஸ் தயார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு

மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு...

உணவுகளை எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்? அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா?

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods...

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா நீங்கள்?

அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக...