தாய்லாந்தின் களியாட்ட நிகழ்ச்சியொன்றில் ஏற்ப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தாய்லாந்து நேரப்படி நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் டெக் மாநிலத்தின் வடக்கு பகுதியிலுள்ள மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள
இது தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.