இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது திணைக்களத்திடமுள்ள அதிக எடைகொண்ட மற்றும் தூரப் பிரதேசங்களுக்கான ரயில்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் குறித்த ரயில் எஞ்சின்களை குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.