இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகளவானோர் மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.