எதிர்வரும் 20 ஆம் திகதி 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மத்திய குழுக் கலந்துரையாடல் இன்று(17) இடம்பெறவுள்ளதாக அதன் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.