follow the truth

follow the truth

December, 14, 2024
HomeTOP1போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் - விசாரணை ஆரம்பம்

போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் – விசாரணை ஆரம்பம்

Published on

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகவும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது

இதன்மூலம், ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் வாகனம் இலங்கைக்கு சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் முறையான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாளிகாகந்த பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (14) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்...

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில்...

எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்து வழமைக்கு

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில...