நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (13) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசியை மறைத்து வைத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்றும்(14) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.