பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது.