follow the truth

follow the truth

December, 14, 2024
HomeTOP1தனது பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர் அசோக ரன்வல

தனது பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர் அசோக ரன்வல

Published on

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த சில நாட்களாக என்னுடைய கல்வி அடைவு சம்மந்தமாக வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நான் எந்த இடத்திலும் பொய்யான தகவல்களை வழங்கவில்லை.

ஆனால் அந்த கல்வித்தகைமையை உறுதி செய்ய கூடிய ஆவணங்கள் என்னிடம் இல்லை. அதனை சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டியுள்ளது. எனவே அது இப்போதைக்கு கடினமான விடயம்.

எனக்கு பேராசிரியர் பட்டம் தந்த ஜப்பான் வசேதா பல்கலைகழகத்தோடு இணைந்த ஆவணங்களை என்னால் முன்வைக்க முடியும். அதனை நான் விரைவில் முன்வைப்பேன்.

ஆனால் எழுந்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்கள் நிர்கதிக்கு உள்ளாகாமல் இருக்க நான் ஏற்றுள்ள சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ”

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தவணை ஆரம்பிக்க முன் பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி...

டிசம்பர் 17, 18ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில்...

கங்காராம விகாரைக்கு அருகில் உணவகம் ஒன்றில் தீப்பரவல்

கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவகத்தில் உள்ள...