துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், விரைவில் டொலர் வழங்கப்பட்டால் பொருட்களை விடுவிக்க முடியும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 25 மில்லியன் டொலர்களை விடுவிக்க இணங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான பணம் வழங்கும் பணி இன்று முதல் நடைபெற உள்ளது.
இதேவேளை, நாணய மாற்று விகிதக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.