புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கட்சியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு தினமும் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
2024 பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் 4 பெரிய கட்சிகள் போட்டியிட்டன.
அவையே பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் புதிய கூட்டணி.
அதன்படி, பொதுத் தேர்தலில் 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களை புதிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியிருந்தது.
ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டார்.
ஆனால், கூட்டணி கட்சிகளின் உடன்பாடு இல்லாமல் இந்த நியமனம் நடந்ததாக பின்னர் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா அனுப்பியுள்ள கடிதத்தில் காஞ்சன விஜேசேகரவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் உடன்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.