follow the truth

follow the truth

December, 12, 2024
HomeTOP1தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு

Published on

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க வாய்ப்பு உள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் அளவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல்...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்க புதிய நடைமுறை

எவரும் புதிய வாகனத்தை மிகுந்த ஆர்வத்துடனேயே வாங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் வாங்கப்படும் வாகனத்தின் சில உண்மைகளின் நம்பகத்தன்மையை...

யாழ்ப்பாணத்தில் பரவிய காய்ச்சல் எலிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 7 பேரின் மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாதிரிகளை பரிசோதித்த பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார...