follow the truth

follow the truth

December, 12, 2024
HomeTOP1யாழில் திடீர் சுகயீனத்தினால் இதுவரையில் 7 பேர் பலி

யாழில் திடீர் சுகயீனத்தினால் இதுவரையில் 7 பேர் பலி

Published on

வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், குறித்த 7 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சுவாசப்பையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த நோய் காரணி தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நோய் நிலைமை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன், காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்?

செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடத்துமாறு கோரி...

பயிர் சேதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு முடிவு

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை...

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி...