follow the truth

follow the truth

December, 11, 2024
Homeவிளையாட்டுவரலாற்று சாதனை படைத்த ஷாஹீன் அப்ரிடி

வரலாற்று சாதனை படைத்த ஷாஹீன் அப்ரிடி

Published on

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அப்போது தான் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார்.

இதுதவிர இவர் ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 116 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 74-வது டி20 போட்டியில் விளையாடிய போது ஷாஹீன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

முன்னதாக தனது 71வது டி20 போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப்-க்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை மிக வேகமாக எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் ஷாஹீன் அப்ரிடி.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிரோஷன் திக்வெல்லவின் கிரிக்கெட் தடை குறித்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11)...

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில்...

லங்கா டி10 சுப்பர் லீக் நாளை ஆரம்பம்

டி10 சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நாளை(11) ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடரில்...