follow the truth

follow the truth

December, 11, 2024
Homeவிளையாட்டுநிரோஷன் திக்வெல்லவின் கிரிக்கெட் தடை குறித்த தீர்மானம்

நிரோஷன் திக்வெல்லவின் கிரிக்கெட் தடை குறித்த தீர்மானம்

Published on

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் (SLADA) நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததையடுத்து, மறு அறிவித்தல் வரை நிரோஷன் திக்வெல்லவை அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த தடைக்கு எதிராக திக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்தார்.

அந்த முறையீட்டின் பிரகாரம் திக்வெல்ல இந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல சார்பில் சட்டத்தரணி சுமிந்த பெரேரா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ரணில் பிரேமதிலக்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரலாற்று சாதனை படைத்த ஷாஹீன் அப்ரிடி

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன்...

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில்...

லங்கா டி10 சுப்பர் லீக் நாளை ஆரம்பம்

டி10 சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நாளை(11) ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடரில்...