follow the truth

follow the truth

December, 11, 2024
HomeTOP1பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு

பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு

Published on

பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு 6 மாடிகளுக்கும் குறைவான வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத்தில் வீட்டுத் தேவை 150,000 க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 7 பேர்ச்சஸ் ஒதுக்கி தனி வீடுகளை நிர்மாணித்தால், வீடுகளை நிர்மாணிப்பதற்கு பெருமளவிலான தோட்டக் காணிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளில் மேலும் 990 வீடுகளை மக்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மோசடி குறித்து CIDயில் முறைப்பாடு

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டை கொள்வனவு மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

போக்குவரத்து அமைச்சின் வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

அடுத்த 24 மணிநேரத்தில் காலநிலையில் மாற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த தாழ்வுப் பகுதி தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24...