தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மறுதினம் இலங்கை மற்றும் தமிழகத்தை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமெனவும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.