இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 109 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போர்ட் எலிஸபெத், சென். ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா 358 ஓட்டங்களையும், இலங்கை 328 ஓட்டங்களையும் பெற்றன.
தென்னாபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி நாள் ஆட்டமான இன்று (09) வெற்றி இலக்கை அடைவதற்கு இலங்கை அணிக்கு 143 ஓட்டங்களே தேவைப்பட்டன. ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருந்தன.
எனினும், 238 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி சுருண்டது.
இதனால் 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.