இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்தது.
157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து தடுமாறிய நிலையில் இருந்தது.
இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 29 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 5 விக்கெட் இருந்த நிலையில் தொடர்ந்து ஆடியது. துவக்கம் முதலே அபார பந்துவீச்சில் மிரட்டிய அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தினர்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 175 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததோடு, அவுஸ்திரேலிய அணிக்கு 19 எனும் எளிய இலக்கை நிர்ணயித்தது. அதன்படி அவுஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை துரத்தி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.