இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை பரோடா அணி (Baroda CricketTeam) படைத்துள்ளது.
சயத் முஷ்தாக் அலி தொடரில் சிக்கிம் அணிக்கெதிரான (Sikkim Cricket Team) போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
குறித்த போட்டியில் பரோடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 349 ஓட்டங்களைக் குவித்தது.
இதற்கு முன்னதாக காம்பியா அணிக்கெதிரான சிம்பாப்வே அணி பெற்றுக்கொண்ட 344 ஓட்டங்களே சாதனையாக காணப்பட்டது.
இதனை படோரா அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.