follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் மணிக்கு ஒரு முறை சிறுவர்கள் துஷ்பிரயோகம்

இலங்கையில் மணிக்கு ஒரு முறை சிறுவர்கள் துஷ்பிரயோகம்

Published on

இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பவது தொடர்பான 32 சம்பவங்கள் தினமும் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 10 ஆயிரத்து 713 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ள இந்த முறைப்பாடுகளில் ஆயிரத்து 632 முறைப்பாடுகள் 5 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான சம்பவங்கள் பற்றியது.

2 ஆயிரத்து 626 முறைப்பாடுகள் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பானவை. முறைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது, முறைப்பாடுகள் கிடைக்காமல் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் பல மடங்காக இருக்கலாம்.

ஊடகங்களுக்கும் சிறுவர்களும் இடையிலான உறவுகள், ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு போன்று இருக்க வேண்டும். எனினும் தற்போது அது பூச்சாண்டிக்கும் பிள்ளைகளுக்குமான உறவு போன்ற நிலைமைக்கு சென்றுள்ளது எனவும் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.