5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், மேலும் வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் மதுபான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.