அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இதன் மூலம் ஐந்து பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், Nation Branding campaign என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்தி 10 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும்; தெரிவித்தார்.