பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நபரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆய்வின் பின்னர் வெளிப்படுத்தப்படும் உண்மைத்தன்மையின் அடிப்படையிலேயே மேலும் துப்பாக்கிகளை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.