தென் கொரியாவில் அவசர நிலையை பிரகடனப் படுத்திய அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் இராணுவ ஆட்சியை நேற்று அறிவித்தார்.
இதனை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் அழுத்தத்திற்குப் பிறகு இராணுவச் சட்ட ஆணையை நேற்று இரவு திரும்பப் பெற்றார்.
தற்போது, அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.