தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் கிடைக்கும் தென்னை உற்பத்திகளையே இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வர்த்தகம் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்