கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்ட பிரபல சூதாட்ட விடுதியொன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கலால் ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சுங்கவரியில்லா 100 வெளிநாட்டு மது போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டு அவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆளாகும்.
கலால் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில், தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு நகர கலால் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.