19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (03) நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக விமத் தின்சரா 106 ஒட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் அல் ஃபஹத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் 229 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அதிகப்பட்சமாக கலாம் சித்திகி அலீன் 95 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அணி தலைவர் விஹாஸ் தேமிக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.