follow the truth

follow the truth

December, 4, 2024
HomeTOP2பாராளுமன்ற உறுப்பினர் என்னை தாக்கினார் - அர்ச்சுனா குற்றச்சாட்டு

பாராளுமன்ற உறுப்பினர் என்னை தாக்கினார் – அர்ச்சுனா குற்றச்சாட்டு

Published on

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்”

எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி...

பார் பர்மிட் எடுத்தவர்களின் பெயர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்

மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின்...

யாழ் விமான நிலையம் தொடர்பில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால்...