follow the truth

follow the truth

December, 4, 2024
Homeஉள்நாடுஇனவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

இனவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

Published on

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் சில இடங்களில் பதிவாகியுள்ளதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்போதுள்ள சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டிடினார்.

இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாறுவதற்கு இடமளிக்காமல் இந்த தருணத்தில் அது முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்;.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து, அதற்குப் பதிலாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான, குடிமக்களுக்கு பொறுப்புக்கூறும்; வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வரத் தயார் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆனால் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றும், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்து தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்ற தயாராக இருப்பவர்களுக்கு இடமளிப்பதில்லை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பார் பர்மிட் எடுத்தவர்களின் பெயர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்

மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின்...

யாழ் விமான நிலையம் தொடர்பில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால்...

விண்ணப்பிக்க தேவையில்லை – அஸ்வெசும தொடர்பிலான விசேட அறிவிப்பு

பெப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை...