உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘UBER’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளது.
‘UBER’ செயலி மூலம் இனி, கார், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சேவை மட்டுமல்லாது, படகு சேவையையும் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்ரீநகரின் ‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ‘UBER ஷிகாரா’ என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை உபர் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
உபர் ஷிகாரா படகு சவாரிக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதிகபட்சமாக 15 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.