ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உரையாற்றுகையில்;
“.. இந்த வரலாற்றில் ஒரு ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்றம். பாரம்பரியமான தேர்ந்த அரசியல் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர், இந்தச் செய்தியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக, நமது நாட்டின் நிர்வாகம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது, இதன் காரணமாக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
மக்கள் நிராகரிப்பது அரசியலை அல்ல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தையே நிராகரிக்கின்றார்கள்..”