கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பதற்றமான சூழ்நிலையில், பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இன்று பிற்பகல் பெலவத்தை கல்வி அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதாவது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் பணிக்கு உடனடியாக நியமிக்குமாறு அரசாங்கத்தை கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பத்தரமுல்லையில் இருந்து கல்வி அமைச்சுக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.