அண்மையில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இதற்காக இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பல் இணைந்துள்ளது.
இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான உளவுத்துறை பரிமாற்றத்தின் பின்னர், குறித்த இரண்டு கப்பல்களையும் இந்திய கடற்படை கைப்பற்றியது.
அதில் ஒரு கப்பலில் சுமார் 400 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், மற்றைய கப்பல் அதன் உதவிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அந்த பல நாள் படகுகளுடன் இலங்கை சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கடந்த 29ம் திகதி இலங்கை கடற்படை கப்பலான கஜபாகுவிடம் ஒப்படைத்தனர்.
இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் பாய்மரக் கப்பல்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று (02) தரையிறங்கச் செய்தனர்.