நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திலும் உணவு, பொது சந்தையில் நிலவும் விலைக்கே வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றம் வந்த முதல் நாளிலிருந்தே தாம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள், விடுதிகளில் தங்க மாட்டார்கள், வாகனங்களை பாவிக்க மாட்டோம் என அறிவித்துள்ளதாக சிலரை நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராளுமன்றில் உணவு வழங்குவதாகவும், உணவு சாதாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது கட்சி கூறுவதாகவும் தெரிவிக்கின்றார்.