இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேரா விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.
தில்ருவான் பெரேரா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ளார்.
இதேவேளை, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை பங்களாதேஷை எதிர்த்து விளையாட உள்ளனர்.