இலங்கையில் ரயில் நிலைய ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊடகங்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ரயில் நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றார்கள் என்றால் டிக்கட் ஏன் வெளியிடப்படுகின்றதென வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுமுறையை செலவிட ஆசிய பசுபிக் எல்லை தேவையான அளவு இடங்கள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.