காசா பகுதிக்கு உணவு வழங்கும் நிறுவனமான World Central Kitchen தொண்டு நிறுவனம் தனது நிவாரணப் பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
தமது பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதையடுத்து தமது நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், காசாவின் மற்றொரு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.