கடும் மழை காரணமாக சுமார் 390,000 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களின் சேத மதிப்பீடு நாளை (02) ஆரம்பமாகும் என அதன் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராச்சி தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.