பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஆதலால், கவனமாக வாகனம் செலுத்துவதும், வீதி விதிகளை கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம். அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.
அத்துடன்,போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.